• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சட்டத்தை கையிலெடுத்த ’சர்கார்’ வரலட்சுமி! - தனுஷ் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரமா?

சட்டத்தை கையிலெடுத்த ’சர்கார்’ வரலட்சுமி! - தனுஷ் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரமா?

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார்

மாரி 2 படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
    மாரி 2 படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

    கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ’மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

    கடந்த ஜூன் 26 - ம் தேதி படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாக அறிவித்த படக்குழுவினர் ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் படத்தின் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. படத்திற்கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ள படக்குழுவினர் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகை சாய்பல்லவி இந்தப் படத்தில் ஆட்டோ ஓட்டும் அராத்து ஆனந்தியாக நடித்துள்ளார் என்பதையும் படக்குழுவினர் வெளியிட்டனர். அதேபோல் தற்போது வரலட்சுமி சரத்குமார் இந்தப் படத்தில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் அரசு அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை செயலாளராக படத்தில் வருகிறது என்பதையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



    சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

    Also Watch:  தீபாவளி அன்று தாயின் கண் முன்னே மகன் கொடூரமாக வெட்டிக் கொலை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: