• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யுவன் - தனுஷ் கூட்டணியில் `மாரி 2’ முதல் பாடல்... `ரவுடி பேபி’!

யுவன் - தனுஷ் கூட்டணியில் `மாரி 2’ முதல் பாடல்... `ரவுடி பேபி’!

மாரி 2 பட போஸ்டர்

மாரி 2 பட போஸ்டர்

மாரி 2 படத்தின் முதல் பாடல் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மாரி 2 படத்தின் முதல் பாடல் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

    படத்தின் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. படத்திற்கான விளம்பரப் பணிகளை தொடங்கியுள்ள படக்குழுவினர் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.

    யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி அராத்து ஆனந்தி என்ற பெயரில் ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்துள்ளார்.

    தற்போது படத்துக்கான சென்சார் முடிந்து யூ/ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாக நடிகர் தனுஷ் கூறியிருந்தார்.



    10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் சொல்லும் விதமாக படத்தின் முதல் பாடல் குறித்த செய்தியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘ரவுடி பேபி’ என்ற படத்தின் முதல் பாடல் வரும் 28-ம் தேதி அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி பாஜகவில் இணையவேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு : வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: