Maanaadu : சிம்புவின் சின்சியாரிட்டி.. நிறைவடைந்தது மாநாடு படப்பிடிப்பு..

மாநாடு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

  • Share this:
சிம்பு படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் தொடங்கப்பட்ட படம் மாநாடு. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சிம்பு தனது ஒத்துழையாமை இயக்கத்தை தொடர, பஞ்சாயத்தானது. படமே ட்ராப் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நொந்து போய் அறிவித்தார். பிறகு சிலபல பஞ்சாயத்துக்குப் பின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆச்சரியமாக குடைச்சல் எதுவும் இன்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. நாயகி கல்யாணி ப்ரியதர்ஷினி. எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக்குமார், ஒய்.ஜி.மகேந்திரன் என சீனியர் நடிகர்களும் நடித்துள்ளனர். அரசியல் படமான இதற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதும் மாநாடு படத்தின் வேலைகள் மறுபடியும் தொடங்கின. சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்ட ட்வீட்டில், மாநாடு பணிகள் முடிவடைந்ததாக குறிப்பிட்டு, வெங்கட்பிரபு, சிம்பு, ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக முடித்து இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை முதலில் திரையரங்கில் வெளியிடுவது என்பதில் சுரேஷ் காமாட்சி உறுதியாக உள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published: