• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Simbu : ’மாநாடு’ ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு சிம்பு குடும்பம் எச்சரிக்கை விடுப்பது ஏன்?

Simbu : ’மாநாடு’ ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு சிம்பு குடும்பம் எச்சரிக்கை விடுப்பது ஏன்?

சிம்பு

சிம்பு

Maanaadu Movie Release : மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என்ற போராட்டத்தில் சிம்புவின் அம்மா..

  • Share this:
    மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகவில்லையென்றால், முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன் என்று நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர். தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி உள்பட பல பேர் மீது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியதோடு, அவர்கள் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரும் தந்தார்.

    சிம்பு எந்தப் படத்தில் நடித்தாலும், மைக்கேல் ராயப்பனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகக்கூறி, திரைத்துறை சங்கங்கள் கட்டையை போடுவது வழக்கம். வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இதேபோல் பிரச்சனையாகி, அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதனை சமாளித்து, படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கச் செய்தார். மாநாடு படம் வெளிவரும் நேரத்திலும் பிரச்சனை கிளம்பியது. இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட அப்படம் தீபாவளிக்குப் பதில் நவம்பர் 25 வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார். தேதி மாறிப்போனதற்கு அருள்பதி உள்ளிட்டவர்கள் கொடுத்த குடைச்சலே காரணம் என்கிறது சிம்புவின் குடும்பம். ஆனால், அது உண்மையா?

    சிம்பு படம் வெளியாகும் போது மைக்கேல் ராயப்பன்  சிம்புவிடம் நஷ்டஈடு கேட்பது வாடிக்கைதான். மாநாடு படத்துக்கும் அப்படியான பிரச்சனை கிளம்பியது உண்மை. ஆனால், படம் தள்ளிப் போனதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாகிறது. 600 க்கும் மேல் திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். அத்துடன் விஷால், ஆர்யா நடித்திருக்கும் எனிமி படமும் வெளியாகிறது. இந்தப் படம் 350 திரையரங்குகளை எதிர்பார்க்கிறது. இவ்விரு படங்களுக்குமே எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைப்பது கஷ்டம். இந்நிலையில், மாநாடு படம் வெளிவந்தால் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். வசூலும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டே பட வெளியீட்டை நவம்பர் 25 க்கு தள்ளி வைத்தார் சுரேஷ் காமாட்சி.

    also read : மஞ்சள் மேகம்.. நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

    ஆனால், இதனை கௌரவக்குறைவாக நினைக்கும் சிம்பு குடும்பம் அருள்பதியும் மற்றவர்களும் பிரச்சனை செய்ததால்தான் பட வெளியீடு தள்ளிப் போனது என்று குற்றம்சாட்டுகிறது. தீபாவளிக்கு படம் வெளியாகவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன், டெல்லி வரை பிரச்சனையை கொண்டு செல்வேன் என சிம்பு குடும்பம் ஒருபக்கம் ஆவேசம் கொள்ள, நேற்று வெங்கட்பிரபு வெளியிட்ட மாநாடு படத்தின் புதிய போஸ்டரில், நவம்பர் 25 முதல் என்ற வாசகம் கொட்டை எழுத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தை தீபாவளிக்கு வெளியிடும் எண்ணம் தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ இல்லை. அண்ணாத்தயுடன் மோதி வசூலை இழக்க வேண்டாம் என்ற அவர்களது எண்ணம் மிகச்சரி. அதேநேரம், தீபாவளிக்கு படம் வரலைன்னா... என்று சிம்பு குடும்பம் எச்சரிக்கை விடுப்பது ஏன்?உண்மையை ஒத்துக்கொள்ள சிம்பு குடும்பம் மறுக்கிறதா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: