`ராட்சசன்’ படத்தை பார்த்து விஷ்ணு விஷாலை பாராட்டிய திமுக தலைவர்!

news18
Updated: October 18, 2018, 7:25 PM IST
`ராட்சசன்’ படத்தை பார்த்து விஷ்ணு விஷாலை பாராட்டிய திமுக தலைவர்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஷ்ணு விஷால்
news18
Updated: October 18, 2018, 7:25 PM IST
‘ராட்சசன்’ படத்தைப் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ள படம் 'ராட்சசன்' . இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி, ராமதாஸ், நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்தை பார்த்த திரைத்துறையினர் பலரும் படத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், ”மிக்க மகிழ்ச்சி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி,  ராட்சசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எனது நடிப்பை பாராட்டினார். நன்றி உதயநிதி ஸ்டாலின்” என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் இயக்குநரை தனது ட்விட்டரில் டேக் செய்து, இதை பெருமைக்குரிய தருணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Loading...
First published: October 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்