சர்கார்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்!

news18
Updated: September 14, 2018, 5:51 PM IST
சர்கார்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்!
சர்கார் பட போஸ்டர்
news18
Updated: September 14, 2018, 5:51 PM IST
சர்கார் படம் குறித்த எந்த தகவலையும் இப்போது கூற முடியாது என்று ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் சர்கார் படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் ராதாரவி,பழ.கருப்பையா , வரலட்சுமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது . இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்த பாடலாசிரியர் விவேக், சர்காரில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் பாடலாசிரியர் விவேக், ``நண்பர்களே. சர்கார் படம் குறித்த தகவலை அறிந்து கொள்வதற்கு நீங்கள் காட்டும் ஆவல் விஜயின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், சர்கார் படம் தொடர்பான அப்டேட்களின் மீது உங்களுக்குள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது. ஆனால், மன்னிக்கவும். இது குறித்து எந்த தகவலும் இப்போது கூற முடியாது. தயவு செய்து காத்திருங்கள். வரும் 2 மாதங்களும் படம் குறித்த அப்டேட்களால் உங்களைத் திணறடிப்போம்.

First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்