தனுஷின் D43 படத்தில் இணைந்த பிரபல பாடலாசிரியர்...

நடிகர் தனுஷ்

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் டி43 படத்தில் பிரபல பாடலாசியரான விவேக் இணைந்துள்ளார்.

  • Share this:
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் டி43. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம்  என்பதால் டி43 என்று கூறி வருகின்றனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படம்  த்ரில்லர் படமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொருவராக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாடலாசியரான விவேக் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத உள்ளார் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக்  பேட்ட, பிகில், தர்பார், பட்டாஸ் என பல வெற்றி திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பாடல்கள் என்று கூறலாம்.



    இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விவேக், வசன எழுத்தாளராக இது என்னுடைய முதல் படம். இந்த தலைமுறையின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்களுடன் இணைந்து வேலை செய்வது பாக்கியமான ஒன்று. இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் மற்றும் மாளவிகா மோகனனுடன் வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாகஉள்ளது என பதிவிட்டுள்ளார்.



    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். கர்ணன் மற்றும் ஹிந்தி படமான அட்ராங்கி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்று வெளியான தகவல் தனுஷ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published: