ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஜெயலட்சுமி - பாடலாசிரியர் சினேகன்

நடிகை ஜெயலட்சுமி - பாடலாசிரியர் சினேகன்

அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் சென்னை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, சினிமா பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி வரும் விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம்  புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் .ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை  ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

Also :PFI தடையை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - கோவையில் பரபரப்பு

இந்த வழக்கின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போழுது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து அடுத்த மாதம் 19ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நகலை  இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, சினேகம் அறக்கட்டளை மூலமாக பணமோசடியில் ஈடுபட்டதாக தன் மீது பாடலாசிரியர் சினேகன் பொய்யான புகார் அளித்ததாகவும், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மூன்று முறை அழைத்து விசாரணை செய்து பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் தெரிவித்ததாக அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினேகன் எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் கொடுத்த பொய் புகார், தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் எழும்பூர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறினார். தற்போது பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தர்மம் மீண்டும் வென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

Published by:Arunkumar A
First published:

Tags: Case filed on celebrities, Cinema, Tamil Cinema