கவிஞர் சினேகன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது - போலீசார் வழக்குப்பதிவு

கவிஞர் சினேகன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது - போலீசார் வழக்குப்பதிவு

கவிஞர் சினேகன்

கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகனுக்கு அக்கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

  • Share this:
கவிஞர் சினேகன் ஓட்டி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின்னர் படிப்படியாக வளர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதி மக்களிடம் பிரபலமானவர் சினேகன். தனது ஆயிரக்கணக்கான பாடல்களால் கவனம் ஈர்த்த சினேகன் அமீர் உடன் ‘யோகி’ படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமானார்.

கவிஞர், நடிகர், பாடகர் மட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகனுக்கு அந்நிகழ்ச்சி இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகனுக்கு அக்கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக டார்ச் லைட் சின்னத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் இருபத்தி இரண்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 5-ம் இடம் பிடித்தார் சினேகன்.

இந்நிலையில் நேற்று இரவு திருமயம் அருகே சவேரியார்புரத்தில் சினேகன் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அருண் பாண்டியன் என்பவர் காயமடைந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசி - உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை

விபத்து குறித்து விசாரித்த திருமயம் போலீசார் கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்திய உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
Published by:Sheik Hanifah
First published: