விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங் பாடல் வரி வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்தார். இதைத்தொடர்ந்து படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை' என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ``எத்தன உயரம் இமயமல - அதில் இன்னொரு சிகரம் எங்கதல” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதுவே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.