• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணீரில் டெல்டா: ரூ.1 கோடியே ஒரு லட்சம் உதவி அறிவித்த ரஜினியின் ’2.0' தயாரிப்பு நிறுவனம்

கண்ணீரில் டெல்டா: ரூ.1 கோடியே ஒரு லட்சம் உதவி அறிவித்த ரஜினியின் ’2.0' தயாரிப்பு நிறுவனம்

லைகா நிறுவனம்

லைகா நிறுவனம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே ஒரு லட்சம் வழங்க உள்ளதாக லைகா குழுமம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே ஒரு லட்சம் வழங்க உள்ளதாக லைகா குழுமம் அறிவித்துள்ளது.

    கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ்த்திரையுலகினரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்ச ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளனர்.

    நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.4.50 லட்சம் பணம் வழங்கி உதவி செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அந்த வரிசையில் , தற்போது இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து ரு.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.



    இதைத்தொடர்ந்து 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. கடலூர் மக்களே உஷார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: