பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

news18
Updated: April 2, 2018, 7:29 PM IST
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்
news18
Updated: April 2, 2018, 7:29 PM IST
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்ட  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால்  சுட்டுக் கொல்லப்பட்டார்.  பிரபாகரன் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் இன்னும் உலவி வருகிறது.

இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஜி.வெங்கடேஷ்குமார்  படமாக எடுக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக  ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை ஜி.வெங்கடேஷ் குமார் இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ 18 என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநர் வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக தமிழில் வெளியான வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை பேசிய வனயுத்தம் படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷ் , கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருப்பதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: April 2, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்