முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Colors Tamil: கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய சீரியலில் ஜோடி சேரும் நிஜ காதல் பறவைகள் - ரசிகர்கள் உற்சாகம்!

Colors Tamil: கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய சீரியலில் ஜோடி சேரும் நிஜ காதல் பறவைகள் - ரசிகர்கள் உற்சாகம்!

ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன்

ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்த காரணத்தால் தொற்று பரவலை குறைக்க விதிக்கப்பட்ட லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த சீரியல் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருக்கும் முக்கிய டிவி சேனல்கள் அனைத்திலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் அனைத்து டிவி சேனல்களும் போட்டி போட்டு கொண்டு விறுவிறுப்பான கதைகளுடன் கூடிய சீரியல்களை ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்க கலர்ஸ் தமிழ் சேனல் நிறைய வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணி முதல் 8.30 வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியல் கலர்ஸ் தமிழின் டிஆர்பி-யை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

இந்த நிலையில் வரும் ஜூலை 19 முதல் கலர்ஸ் தமிழ் டிவி-யில் 'அபி டெய்லர்' என்ற புத்தம்புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. உண்மையில் இந்த சீரியலை கடந்த மீ மாதம் முதலே ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்த காரணத்தால் தொற்று பரவலை குறைக்க விதிக்கப்பட்ட லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த சீரியல் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. தற்போது தமிழகம் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் வரும் ஜூலை 19 திங்கட்கிழமை முதல் திங்கள் - சனி இரவு 10 மணிக்கு புத்தம் புதிய 'அபி டெய்லர்' சீரியல் ஒளிபரப்பாகும் என்று கலர்ஸ் தமிழ் டிவி தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்களில் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ரசிகர்களுக்கு இங்கே ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்த சீரியலில் பூவே பூச்சூடவா புகழ் நடிகை ரேஷ்மா முரளிதரன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இது தொடர்பான ப்ரமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக அதாவது ஹீரோவாக நடிக்கிறார் ரேஷ்மாவின் நிஜ காதலர் மதன் பாண்டியன். அபி டெய்லர் சீரியல் மூலம் முதல் முறையாக ரேஷ்மாவும் - மதனும் ஒரு ஜோடியாக நடிக உள்ள தகவல் அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது. டான்ஸ் ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான கேரளாவை சேர்ந்த ரேஷ்மா, அதன் பின்னர் . ஜீ 5 தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி என்ற கேரக்டர் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதே சீரியலில் சுந்தர் என்ற கேரக்டரில் நடிப்பவர் மதன் பாண்டியன். ஆனால் இந்த சீரியலில் இவர்கள் இருவரும் ஜோடி இல்லை. நிஜ வாழ்வில் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் தாங்கள் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம்செய்து கொள்ள போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகும் நிஜ ஜோடி இருவரும் சீரியலில் ஒன்று சேர உள்ள தகவல் வெளியாகி உள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read... 'ரசிகர்களே ஆதரவு கொடுங்கள்' - ரோஜா சீரியல் புது வில்லி வேண்டுகோள்!

"நம்ம ஹீரோ இராவணனும் இல்லை ராமனும் இல்லை"என்ற கேப்ஷனுடன் ரேஷ்மா முரளிதரன் (அபி) - மதன் பாண்டியன் (அசோக்) நடித்துள்ள அபி டெய்லர் சீரியலின் ப்ரமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கதையின்படி, அபிராமி (ரேஷ்மா) கடின உழைப்புடைய ஒரு திறமையான டெய்லர். ஜவுளித் துறையில் முன்னோடியாக உள்ள ஒரு தொழிலதிபர் அசோக் (மதன்). அபிராமி அசோக்கிற்குச் சொந்தமான நிறுவனத்தில் சேருகிறார். அதன் பின் நடைபெற உள்ள சம்பவங்கள் இந்த சீரியலின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Entertainment