Home /News /entertainment /

பப்ளியா இருந்த நான் ஒல்லியானது இப்படித்தான் - லாஸ்லியா சொன்ன ரகசியம்.!

பப்ளியா இருந்த நான் ஒல்லியானது இப்படித்தான் - லாஸ்லியா சொன்ன ரகசியம்.!

Losliya

Losliya

Losliya Mariyanesan | இதனிடையே குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து "பேபி நீ சுகர்" என்ற ஆல்பம் சாங்கில் நடித்து இருக்கிறார். இந்த பாடல் Sony Music South சேனலில் ரிலீஸ் ஆகிறது. இந்த பாடலின் ப்ரமோ வீடியோவை பார்த்த லாஸ்லியாவின் தீவிர ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஏனென்றால் இதில் லாஸ்லியா முன்பு இருந்ததை விட மிகவும் ஒல்லியான தோற்றத்தில் உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
சின்னத்திரையில் மெகாஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம்.

இதில் முக்கியமான ஒருவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து மக்களிடையே மிகவும் பிபலமானவர் லாஸ்லியா. கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸின் 3-வது சீசன் ஒளிபரப்பானது. இந்த சீசனின் முடிவில் முகேன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா மரியனேசன் கடந்த 1996-ல் மார்ச் 23-ம் தேதி பிறந்தார். இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்த இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள்.

பிக்பாஸில் பங்கேற்ற பிறகு லாஸ்லியாவிற்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. எனினும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்று கொள்ளாமல், ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர்கள் சதீஷ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான "பிரண்ட்ஷிப்" திரைப்படம் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.



இதனிடையே குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து "பேபி நீ சுகர்" என்ற ஆல்பம் சாங்கில் நடித்து இருக்கிறார். இந்த பாடல் Sony Music South சேனலில் ரிலீஸ் ஆகிறது. இந்த பாடலின் ப்ரமோ வீடியோவை பார்த்த லாஸ்லியாவின் தீவிர ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஏனென்றால் இதில் லாஸ்லியா முன்பு இருந்ததை விட மிகவும் ஒல்லியான தோற்றத்தில் உள்ளார். இந்நிலையில் தான் ஏன் ஒல்லியானேன் என்பது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை லாஸ்லியா.

Also Read : வலிமை படம் நஷ்டம் - உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்!

ரசிகர்கள் எல்லோரும் குண்டாக இருக்கும் லாஸ்லியாவை மிஸ் செய்வதாக கூறுகிறார்களே என்று பேட்டி எடுத்த பெண் கேட்கையில், முதல் விஷயம் எனக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருந்தது. அதற்காக உடலை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டாவது விஷயம் நீங்கள் எல்லாம் பார்ப்பதற்கு முன்பு நான் ஒல்லியாகவே இருந்தேன். பிக்பாஸிற்கு வந்த போது தான் சற்று வெயிட் ஏறியது. ஸ்கிரீனில் நான் பெரிதாக தோன்றுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சினிமா தான் என் துறை என்று முடிவு செய்து விட்ட பிறகு இதற்காக ஹார்ட் வொர்க் செய்து தான் ஆக வேண்டும். எனவே தான் தற்போது உடலை குறைத்து மீண்டும் ஒல்லியாகி உள்ளேன். இந்த 2 காரணங்களுக்காகவே எனது உடல் எடையை தற்போது குறைத்துள்ளேன் என்று தான் ஒல்லியானதற்கான காரணத்தை ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார் நடிகை லாஸ்லியா.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, Losliya

அடுத்த செய்தி