• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உங்களுடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன் - நடிகர் தனுஷ்

உங்களுடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன் - நடிகர் தனுஷ்

மாரி

மாரி

ரவுடி பேபி பாடலில் நடன கலைஞர்களில் ஒருவரான ஜனி என்பவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரவுடி பேபி பாடலில் நடன கலைஞர்களில் ஒருவராக பணிபுரிந்த ஜனி என்பவர் நடன பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ரவுடி பேபி பாடல் யூடியூபை தெறிக்கவிட்டது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார், இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். பாடலில் தனுஷ், சாய் பல்லவி இருவரின் நடனமும் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.



    தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற பாடலாக மெர்சல் படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் இருந்து வந்தது.

    இந்த சாதனையை ரவுடி பேபி பாடல் முறியடித்தது. தற்போது வரை இந்தப்பாடல் 123 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    ரவுடி பேபி பாடலில் நடன கலைஞர்களில் ஒருவராக பணிபுரிந்த ஜனி என்பவர் நடன பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘ரவுடி பேபி பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த நேரத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பாலாஜி மோகன், பிரபுதேவா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.



    இந்த பதிவுக்கு நடிகர் தனுஷ், ‘உங்களுடன் பல படங்களில் பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன்’என்று பதிலளித்துள்ளார்.



    வெளியானது அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: