மீண்டும் கார்த்தியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் கார்த்திக் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  கைதி படத்தை அடுத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய்,, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கி கொண்டுவர திட்டமிட்டது படக்குழு. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பினால் தீபாவளிக்கு மாஸ்டர் படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என்ற முடிவில் உள்ளது படக்குழு.

  மாஸ்டர் படத்துக்கு பின்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பட வேலைகளை முடித்துவிட்டார்.

  ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை முடித்துவிடலாம் என்ற திட்டத்தில் லோகேஷ் கனகராஜ் இருப்பதாக தெரிகிறது. இந்த ஊரடங்கின் போது லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்துக்கான கதையை எழுதி முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

  தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கான கெட்டப்பில் இருக்கும் கார்த்தியை வைத்து லாக்டவுன் முடிந்ததும் குறைவான நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க: ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு நடனமாடிய நடிகருக்கு கமல் பாராட்டு...

  இந்தப் படத்தையும் எஸ்.ஆர்.பிரபுவே தயாரிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.
  Published by:Sheik Hanifah
  First published: