முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன்!

லோகேஷ் கனகராஜ் படத்தில் இணையும் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன்!

புதிய நிறுவனத்திற்கு ரெய்ன் ஆன் பிலிம்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், OTT-க்கான படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை தயாரிப்பதாகவும் தெரிகிறது.

புதிய நிறுவனத்திற்கு ரெய்ன் ஆன் பிலிம்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், OTT-க்கான படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை தயாரிப்பதாகவும் தெரிகிறது.

புதிய நிறுவனத்திற்கு ரெய்ன் ஆன் பிலிம்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், OTT-க்கான படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை தயாரிப்பதாகவும் தெரிகிறது.

 • 1-MIN READ
 • Last Updated :

  மணிரத்னம் தயாரிக்கும் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  சமீபமாக தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்களை பல இயக்குநர்கள் இணைந்து இயக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட 9 இயக்குநர் இயக்கிய நவரசா என்ற ஆந்தாலஜி படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதனை இயக்குநர் மணிரத்னம் தயாரித்திருந்தார். சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, ரோகினி, ரேவதி, பார்வதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

  இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவிருக்கிறார்களாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  புதிய நிறுவனத்திற்கு ரெய்ன் ஆன் பிலிம்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், OTT-க்கான படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை தயாரிப்பதாகவும் தெரிகிறது. இந்த தயாரிப்பின் கீழ் உருவாகும் முதல் படம் மல்டி ஸ்டாரர் படமாக இயக்கப்படவுள்ளதாம். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

  தவிர தற்போது லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முக்கியக் கதாபத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: