வலிமை பட இயக்குநரை சந்தித்த மாஸ்டர் டைரக்டர் - லைக்ஸ் அள்ளும் பதிவு

வலிமை பட இயக்குநரை சந்தித்த மாஸ்டர் டைரக்டர் - லைக்ஸ் அள்ளும் பதிவு

ஹெச்.வினோத் உடன் லோகேஷ் கனகராஜ்

வலிமை பட இயக்குநரை சந்தித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
மாநகரம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து வெளியான கைதியும் வெற்றிப்படமாக அமைய மூன்றாவது படமே விஜய் உடன் அமைந்தது. கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கிய காலகட்டத்தில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற நிலையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் பாய்ச்சியது.

அதைத்தொடர்ந்து தான் சினிமாவில் அதிகம் ரசிக்கும் கமல்ஹாசனிடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் தான் சிறிய நட்சத்திரங்களை வைத்து சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ஹெச்.வினோத். இரண்டாவதாக இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து மூன்றாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்தை வைத்து இந்தியில் வெற்றி பெற்ற ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்த ஹெச்.வினோத் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஹெச்.வினோத்தை சந்தித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், பல வருங்களுக்குப் பிறகு வினோத்தை சந்தித்தேன் என்று சகோதரத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.ஹெச்.வினோத் - லோகேஷ் கனகராஜ் இருவருமே குறுகிய காலத்தில் தங்களது தனித்திறமையால் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: