முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எல்.கே.ஜி. வெற்றி: கஜா புயலால் பாதித்த 10 பள்ளிகளை தத்தெடுக்கும் படக்குழு

எல்.கே.ஜி. வெற்றி: கஜா புயலால் பாதித்த 10 பள்ளிகளை தத்தெடுக்கும் படக்குழு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்'எல்.கே.ஜி'. சமகால அரசியலை நகைச்சுவையுடன் பேசிய இந்தப் படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

எல்.கே.ஜி. பட வெற்றியின் மூலம் கிடைக்கும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம் என்று நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்'எல்.கே.ஜி'. சமகால அரசியலை நகைச்சுவையுடன் பேசிய இந்தப் படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. இந்தப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வெளியான 3 நாட்களிலேயே வசூலைக் குவித்து அனைத்து தரப்புக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “என் மேல் நான் வைத்த நம்பிக்கையை என்னுடன் இருந்தவர்கள் கூட வைக்கவில்லை, ஐசரி கணேஷ் நம்பிக்கை வைத்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார். அவர் கேட்டது என் பாக்கியம்.

நாஞ்சில் சம்பத் மீது இருந்த கறை இந்த படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 ஸ்கிரீன்ஸ் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. அதை சாத்தியப்படுத்திய சக்திவேலனுக்கு நன்றி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம்” என்று கூறினார்.

நட்சத்திர ஹோட்டல்களில் எல்லை மீறும் போதை பழக்கம் - வீடியோ

First published:

Tags: RJ Balaji