முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல் படமே வெற்றி... ஆர்.ஜே.பாலாஜிக்கு தயாரிப்பாளர் அட்வைஸ்!

முதல் படமே வெற்றி... ஆர்.ஜே.பாலாஜிக்கு தயாரிப்பாளர் அட்வைஸ்!

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்'எல்.கே.ஜி'. சமகால அரசியலை நகைச்சுவையுடன் பேசிய இந்தப் படம் பிப்.22-ம் தேதி வெளியானது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காமெடியனாக இருந்து ஹீரோவான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று எல்.கே.ஜி பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவுரை கூறியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் 'எல்.கே.ஜி'. சமகால அரசியலை நகைச்சுவையுடன் பேசிய இந்தப் படம் பிப்.22-ம் தேதி வெளியானது. இந்தப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வெளியான 3 நாட்களிலேயே வசூலைக் குவித்து அனைத்து தரப்புக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் முதல் படம் எல்கேஜி பெரிய வெற்றியை பெறும் என நாங்கள் ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்த்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான படம். என் தந்தை பெயரில் தயாரித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஜய் மூலமாக பாலாஜியை எனக்கு சில வருடங்களாகவே தெரியும். அவர் என்னை அணுகி கதை சொன்னபோதே நீங்களே நடிங்க என சொன்னேன்.

பல படங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பில் இருந்தாலும், ஷூட்டிங் எங்கு நடக்கிறது என்பது கூட எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாலாஜி மட்டும் தினமும் ஃபோன் செய்து பேசுவார். காமெடியனாக இருந்து ஹீரோவான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருக்கும் விநியோகஸ்தர்களிலேயே மிகவும் நேர்மையானவர் என சக்திவேலனை சொன்னார்கள். அவர் கேட்ட விலை குறைவாக இருந்தாலும் அவருக்காக இந்த படத்தை கொடுத்தேன்.

ஜெயம் ரவி படம், ஜீவா படம், தேவி 2 , பப்பி உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து இதே பேனரில் வெளியாகும்” என்று கூறினார்.

சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் எல்லை மீறும் போதை பழக்கம் - வீடியோ

First published:

Tags: RJ Balaji