முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எல்.கே.ஜி-க்கு 5 மணிக் காட்சி... ஆர்.ஜே.பாலாஜி - விஷ்ணு விஷால் திடீர் மோதல்

எல்.கே.ஜி-க்கு 5 மணிக் காட்சி... ஆர்.ஜே.பாலாஜி - விஷ்ணு விஷால் திடீர் மோதல்

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் விஷ்ணு விஷால்

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் விஷ்ணு விஷால்

உங்களைச் சுற்றியிருப்பவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன் நீங்கள் என்ன செய்தீர்கள் - ஆர்.ஜே.பாலாஜிக்கு விஷ்ணு விஷால் பதில்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

எல்.கே.ஜி படத்தை அதிகாலை 5 மணிக்கு திரையிட அனுமதி கொடுத்தது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜிக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே மறைமுக வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் பிரபு ஆர்.ஜே.பாலாஜியை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் எல்.கே.ஜி. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு அப்பாவாக நாஞ்சில் சம்பத் நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 22-ம் தேதி ரிலீசாகிறது.

அஜித், ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை காட்சியாக திரையிடப்படுவது வழக்கம். இந்தநிலையில் எல்.கே.ஜி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பால் ரோகிணி திரையரங்கம் அதிகாலை 5 மணிக்கு படத்தைத் திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால், "காலை 5 மணி காட்சி அதன் மதிப்பை இழந்து வருகிறது. தந்திரமாக மாறிவிட்டது" என்று மறைமுகமாக சாடினார்.

இதற்கு ட்விட்டரில் பதில்கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி, "நானும் எல்.கே.ஜி படத்துக்கான காலை 5 மணிக் காட்சி தந்திரம் என்றே நினைத்தேன். பிறகு திரையரங்க உரிமையாளரிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டேன்.

எங்களுக்கு யார் பரிந்துரையிலும் இடம் கிடைக்கவில்லை. தகுதியின் அடிப்படையில் (மெரிட் சீட்) இடம் கிடைத்துள்ளது. இப்போது இந்த சிந்தனைக்கு ஓய்வு கொடுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.மற்றவர்கள் உழைப்புக்கு மதிப்பளியுங்கள், உங்கள் மதிப்பு உங்களுக்குக் கிடைக்கும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜிக்கு பதிலளித்த விஷ்ணு விஷால், “உங்களைச் சுற்றியிருப்பவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன் நீங்கள் என்ன செய்தீர்கள். அப்போது நடிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. உங்கள் உழைப்பை மட்டுமில்லாமல் அனைவரின் கடின உழைப்பையும் மதியுங்கள்.

நான் எனக்கான அங்கீகாரத்தைப் பெறுகிறேன். நான் வெற்றிக்காக மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் மாறி மாறி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் பேசி பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொண்டனர். அதை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அவதூறு பரப்பும் முன்னாள் காதலன் - நடிகை புகார் - வீடியோ

First published:

Tags: Actor Vishnu Vishal, LKG, RJ Balaji