கிராமி விருது விழாவில் விவசாயிகள் ஆதரவு முகக்கவசத்துடன் வந்த யூட்யூபர்

கிராமி விருது விழாவில் விவசாயிகள் ஆதரவு முகக்கவசத்துடன் வந்த யூட்யூபர்

லில்லி சிங்

அமெரிக்காவில் நடைபெறும் கிராமி விருது விழாவில் விவசாயிகளுக்கு ஆதரவான முகக்கவசத்துடன் யூட்யூபர் லில்லிசிங் பங்கேற்றுள்ளார்.

  • Share this:
    உலக அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டுவருகிறது. இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கிராமி விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸிலுள்ள கன்வென்சன் மையத்தில் 63-வது கிராமி விருது இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த கிராமி விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற யூட்யூபரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லில்லி சிங் வருகை தந்திருந்தார்.

    அவர், ‘i support farmers’ என்று எழுதப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வந்து விவசாயிகளுகு ஆதரவு தெரிவித்தார். மேலும், அந்தப் புகைப்படத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘சிகப்பு கம்பள விருது விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் அதிக கவனம் பெறும் என்பது எனக்குத் தெரியும். அதனால், ஊடகங்களே இதனுடன் ஒளிபரப்புங்கள்’ என்று குறிப்பிட்டு i stand with farmers என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.


    அவருடைய புகைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்துவருகிறது. யூட்யூபர் லில்லிக்கு ட்விட்டரில் 5 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். அவருடைய யூட்யூப் பக்கத்தை 15 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். முன்னதாக, ஜனவரி மாதத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது அமெரிக்காவின் பாப் பாடகி ரிஹன்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: