பிரபல ஒளிப்பதிவாளர் திடீர் மறைவு - பாரதிராஜா இரங்கல்

நிவாஸ்

இயக்குநர் பாரதிராஜாவின் முதல் திரைப்படமான '16 வயதினிலே' படத்தின்  ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

 • Share this:
  பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான நிவாஸ் இன்று  கேரளாவில் மரணமடைந்துள்ளார்.

  மலையாளத்தில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய நிவாஸ் சென்னையில் உள்ள அடையாறு திரைப்பட கல்லூரியின் முன்னாள் மாணவர். இயக்குநர் பாரதிராஜாவின் முதல் திரைப்படமான '16 வயதினிலே' படத்தின்  ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதோடு அவருடன் இணைந்து கிழக்கே போகும் ரயில் (1978), சிகப்பு ரோஜாக்கள் (1978), சோல்வா சவான் (1978) மற்றும் புதிய வார்ப்புகள் (1979) ஆகியப் படங்களில் பணியாற்றியுள்ளார்.  பாரதிராஜா, அருணா முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்த 'கல்லுக்குள் ஈரம்' என்ற தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக மாறினார் நிவாஸ். பின்னர் அவர் மற்ற நான்கு படங்களையும் தமிழில் இயக்கி, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் திரையுலகில் வேலை செய்வதை நிறுத்தினார்.

  தனது முதல் ஐந்து வெற்றிகரமான படங்களுக்கு தூணாக இருந்த நிவாஸின் மரணம் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக, அவரது நண்பர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நிவாஸ் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: