Leena Manimekalai: லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘மாடத்தி’ பேசும் சாதி அரசியல்!

லீனா மணிமேகலையின் மாடத்தி

தமிழ் திரையில் இதுவரை பேசாத புதிரை வண்ணார் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மாடத்தியில் பேசியிருக்கிறார் லீனா மணிமேகலை.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆவணப்படங்கள், திரைப்படங்கள், கவிதை என பல தளங்களில் இயங்கும் லீனா மணிமேகலையின் மாடத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனையொட்டி சாதி அரசியல் குறித்தப் பேச்சு சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.

லீனா மணிமேகலை அடிப்படையில் ஒரு கவிஞர். சமூக செயற்பாட்டாளர். பத்துக்கும் மேற்பட்ட முக்கியமான ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் காணாமல் போவதைப் பற்றி இவர் எடுத்த வொயிட் வேன் ஸ்டோரிஸ் ஆவணப்படம் முக்கியமானது

இலங்கைத் தமிழர்கள் கடல்கடந்து தமிழகத்தில் தஞ்சம்புகும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து 2011 இல் இவரது இயக்கத்தில் செங்கடல் திரைப்படம் வெளியானது. இது அவரது முதல் திரைப்படம். தணிக்கைக்குழு செங்கடலுக்கு தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்தது. மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பி சான்றிதழ் பெற்றுக் கொண்டார். இந்தப் படம் 2011 இல் நடைபெற்ற 42 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. செங்கடலுக்கு அடுத்து அவர் இயக்கிய படம், மாடத்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடத்தியை லீனா மணிமேகலை 2018 இல் எடுத்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் மாடத்தி திரையிடப்பட்டது. 2019 இல் இதன் ட்ரெய்லரை நந்திதா தாஸ் வெளியிட்டார். ஜுன் 24 நீஸ்ட்ரீம் ஓடிடியில் மாடத்தி வெளியாவதை முன்னிட்டு முன்னாள் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் மாடத்தியின் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டார்

Also read... ' விஷால் நாட் ஏ காமன் மேன்' - பெயர் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விஷால்

தமிழ் திரையில் இதுவரை பேசாத புதிரை வண்ணார் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மாடத்தியில் பேசியிருக்கிறார் லீனா மணிமேகலை. தீண்டாமையில் பலவகைகள் உண்டு. சிலரை தொட்டால் தீட்டு, சிலர் அருகில் வந்தால் தீட்டு. புதிரை வண்ணார் சமூகத்தினரை; பார்த்தாலே தீட்டு. இவர்கள் பகலில் ஊருக்குள் நடமாட அனுமதியில்லை. இரவில் மட்டுமே வெளியே வருவார்கள். சமூகத்தில் கடைகோடிக்கும் கீழே அழுத்தி வைக்கப்பட்ட இந்த சமூகத்தைப் பற்றி ஒரு சிறுமியின் வழியாக பேசியிருக்கிறார் லீனா மணிமேகலை. இதன் திரைக்கதையில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்றும் ரஃபிக் இஸ்மாயில் ஆகியோர் பங்களிப்பு செலுத்தியுள்ளனர்

கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் செம்மலர் அன்னம், அஜ்மினா கஸிம், அருள் குமார், ஸ்டெல்லா ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜம், கார்த்தி முத்துகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்

தமிழில் மாற்று சினிமாக்கள் அரிது. விதிவிலக்காக மாடத்திப் போன்ற திரைப்படங்கள் எப்போதாவது வெளியாகும். வணிகத்தை நம்பாமல் எடுக்கப்படும் இதுபோன்ற தற்சார்பு திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையாகும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: