மறைந்த பின்பும் நடிகை சித்ராவின் பட டீசருக்கு மக்கள் கொடுத்த பேராதரவு

மறைந்த பின்பும் நடிகை சித்ராவின் பட டீசருக்கு மக்கள் கொடுத்த பேராதரவு

நடிகை சித்ரா

சின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட விஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் டீசர் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

  • Share this:
தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவரது இயற்பெயரை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாகவே பெரும்பாலானோருக்கு தெரியும்.

சின்னத்திரையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் அனைவராலும் பேசப்படும் நாயகியாக வளர்ந்த இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் தனது முதல் திரைப்படம் வெளியாவதற்குள் அவர் இந்த உலகத்தை விட்டு விடை பெற்று விட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 13-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு டிசம்பர் 31-ம் தேதி டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டீசர் வீடியோ தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சபரிஷ் கூறுகையில் "நம்மிடையே விஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்... ஈஷா யோகா மையத்தில் அமலா பால்

‘கால்ஸ’ திரைப்படம் தஞ்சாவூர், திருச்சி, சென்னை, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published:

சிறந்த கதைகள்