இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். வயது 92.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மீண்டும் மோசமானது.
இந்நிலையில், லதா மங்கேஷ்கர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lata Mangeshkar