முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா சந்திரன் மறைவு.. இசை ரசிகர்கள் இரங்கல்!

பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா சந்திரன் மறைவு.. இசை ரசிகர்கள் இரங்கல்!

பம்பாய் சகோதரிகளில் லலிதா காலமானார்.

பம்பாய் சகோதரிகளில் லலிதா காலமானார்.

இசை இரட்டையர்களான பம்பாய் சகோதரிகளில் இளையவரான லலிதா புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக இசை உலகில் ஆதிக்கம் செலுத்திய பிரிக்க முடியாத பாம்பே சகோதரிகளில் இளையவரான சி லலிதா தனது 84 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

கேரளாவின் திருச்சூரில் முக்தாம்பாள் மற்றும் என் சிதம்பரம் ஐயர் ஆகியோருக்கு மகள்களாக லலிதா மற்றும் அவரது மூத்த சகோதரி சி சரோஜா பிறந்தனர். ஆங்கிலப் பேராசிரியையாக ஆசைப்பட்ட லலிதாவுக்கு இசையில் ஆர்வம் இல்லை. சரோஜா, லலிதாவை சேர்ந்து பாடும்படிஊக்குவித்தார். சிறு வயதில் இருந்தே இருவரும் சேர்ந்து பாடும் வழக்கத்தடை தொடங்கினர்.

சகோதரிகள் இருவரும் பம்பாயில் மாட்டுங்காவில் பள்ளிக்கல்வி பயின்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். பின்னர் அவர்கள் பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் தந்தையான  புகழ்பெற்ற எச்.ஏ.எஸ்.மணியின் வழிகாட்டுதலின் கீழ் பாடத் தொடங்கினர். அதோடு முசிறி சுப்பிரமணிய ஐயர் மற்றும் டி.கே கோவிந்த ராவ் ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றனர்.

பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில் இருந்து இவர்கள்  ‘பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். பல மொழிகளில் பாட அசத்தும் இந்த இசை இணையர்களுக்கு  மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி, 2010 இல் சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டது

லலிதாவின் கணவர், தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் . அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.லலிதா சந்திரனின் உடல் அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Music