ரஜினியுடன் செல்பி - மோகன் பாபுவின் மகள் வெளியிட்ட புகைப்படம்!

மோகன் பாபுவின் மகள் வெளியிட்ட புகைப்படம்

ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்து, அதனை இன்று சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினியின் நெருங்கிய நண்பர் தெலுங்கு நடிகர் மோகன் பாபு. அவரது மகள் லட்சுமி மஞ்சு ரஜினியுடன் எடுத்த செல்பியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

ரஜினியும், மோகன் பாபுவும் வாடா போடா நண்பர்கள். ரஜினி விரும்பி செல்லும் வீடுகளில் ஒன்று மோகன் பாபுவினுடையது. மோகன் பாபுக்கு இரு மகன்கள், ஒரு மகள். ரஜினியின் மகள்களில் ஒருவரை தனது மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மோகன் பாபுக்கு இருந்தது. அதேபோல் ரஜினிக்கும். ஆனால், அது நடக்கவில்லை.

Also read... சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போ? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்து, அதனை இன்று சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி மோகன் பாபுவின் வீட்டிற்கு சென்ற போது இந்த செல்பியை லட்சுமி மஞ்சு எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

அண்ணத்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன. படக்குழு சென்னை திரும்பியதும் ரஜினி சென்னையில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேச உள்ளார். நவம்பரில் தீபாவளி வெளியீடாக அண்ணாத்த திரைக்கு வரவுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: