ரஜினி 168 படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் - சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நயன்தாரா - ரஜினிகாந்த்

 • Share this:
  ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 168-வது படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

  இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை நயன்தாரா, தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  இந்தப் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க: திருமணத்தை நிறுத்திவிட்டார்... தர்ஷன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷனம் ஷெட்டி...!


  Published by:Sheik Hanifah
  First published: