Nayanthara: இரு புதிய படங்களில் நடிக்கும் நயன்தாரா...!

நடிகை நயன்தாரா

சீதக்காதி, பெட்ரோமாக்ஸ், பென்குவின் படங்களை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து இவ்விரு படங்களை தயாரிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா, இரு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2003 இல் சத்தியன் அந்திக்காடின் மனசின்அக்கரை படத்தில் அறிமுகமான நயன்தாரா, 2005 இல் ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். ஒரு நடிகை 18 வருடங்கள் தொடர்ச்சியாக நாயகியாக நடிப்பது, அதுவும் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பது சாதனை. அதனை செய்திருக்கிறார் நயன்தாரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது நடிப்பில் தயாராகியிருக்கும் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் நயன்தாரா நடித்து வருகிறார். தவிர ரஜினியுடன் அண்ணாத்த படமும் இருக்கிறது.

Also read... Thuppakki - 2: துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தும் முருகதாஸ்!

இந்தப் படங்களைத் தொடர்ந்து இரு புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார். சீதக்காதி, பெட்ரோமாக்ஸ், பென்குவின் படங்களை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து இவ்விரு படங்களை தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் மற்றும் நடிப்பவர்கள் குறித்த விவரங்களை தயாரிப்புத் தரப்பு விரைவில் வெளியிட உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: