கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணையும் சூர்யா

news18
Updated: March 13, 2018, 6:21 PM IST
கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணையும் சூர்யா
கே.வி ஆனந்துடன் நடிகர் சூர்யா
news18
Updated: March 13, 2018, 6:21 PM IST
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குநர் கே.வி ஆனந்துடன் இணைகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கே.வி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Core team for my next film with @Suriya_offl : Produced By @LycaProductions @Jharrisjayaraj #PattukottaiPrabhakar - Dop #GavmicAry - Art @KiranDrk— anand k v (@anavenkat) March 13, 2018

 

லைக்கா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு கேவ்மிக், வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார்

அயன்,மாற்றான் படங்களுக்கு பிறகு சூர்யா - கே.வி ஆனந்த் இணையும் இப்படத்தில்  சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகியின் பெயரை படத்தின் இயக்குநர் இன்னும் வெளியிடவில்லை. கே.வி ஆனந்த் - சூர்யா கூட்டணியில் வெளியான மாற்றான் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.வி.ஆனந்தைப் போன்றே மாற்றான்,அயன் படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த கூட்டணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்