Home /News /entertainment /

மாதவனின் அடுத்த தமிழ் படத்தின் இயக்குனர் அறிவழகன்?

மாதவனின் அடுத்த தமிழ் படத்தின் இயக்குனர் அறிவழகன்?

மாதவன்

மாதவன்

Actor Madhavan : மாதவன் நடிக்கும் புதிய தமிழ் படத்தை அறிவழகன் இயக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

மாதவன் ரொம்பவும் தேர்வு செய்தே படங்களை ஒப்புக் கொள்கிறார். 2017 இல் வெளியான விக்ரம் வேதாவுக்குப் பிறகு தமிழில் மாறா படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்தியில் இதைவிட பரவாயில்லை. மூன்று படங்கள் அவரது நடிப்பில் வெளிவர உள்ளன. அதில் ஒன்று அவர் இயக்கி நடித்திருக்கும் ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு.

இவை தவிர அவரும் சுர்வீன் சவுலாவும் நடித்த டிகப்பிள்டு வெப் தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களின் கேள்வி, மாதவன் எப்போது, யாருடைய இயக்கத்தில் தமிழில் நடிக்க இருக்கிறார்? அதற்கான பதில் கிடைத்துள்ளது.

also read : சல்யூட் - ரசிகர்களுக்கு துல்கர் சல்மானின் பொங்கல் ட்ரீட்

ஈரம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகனின் அடுத்தப் படத்தில் மாதவன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிவழகன் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் பார்டர் படத்தை இயக்கினார். நவம்பர் 17 வெளியாகும்  என அறிவிக்கப்பட்ட படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் மாதவனை இயக்குகிறார் என்பது செய்தி.

அறிவழகனும், மாதவனும் இணையும் படம் எத்தகையது, யார் உடன் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. விரைவில் இவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Madhavan

அடுத்த செய்தி