ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உங்களைப் போன்றவர்களால் அஜித்துக்கு அசிங்கம் - குஷ்பு குமுறல்

உங்களைப் போன்றவர்களால் அஜித்துக்கு அசிங்கம் - குஷ்பு குமுறல்

குஷ்பு | அஜித்

குஷ்பு | அஜித்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அஜித் ரசிகர்கள் என்ற பெயருடன் தன்னை ட்விட்டரில் விமர்சிப்பவர்களுக்கு நடிகை குஷ்பு காட்டமாக பதிலளித்துள்ளார்.

  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையில் தினக்கூலிகளாக பணியாற்றும் பெஃப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு உதவும்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

  அதற்காக குஷ்பு மற்றும் அவரது கணவர் இணைந்து ரூ.5 லட்சம் நிதிவழங்குவதாக அறிவித்தனர். இதை ட்விட்டரில் பதிவிட்டிருந்த குஷ்புவிடம் அஜித் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவர், தமிழ்நாட்டு மக்களுக்கு உதவாமல் , திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அந்தத் துறையினருக்கு மட்டும் தான் உதவுவீர்கள் என்று விமர்சித்தார்.

  இதைப்பார்த்து கோபமான குஷ்பு, “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

  இதையடுத்து அஜித் ரசிகராக தன்னை அடையாளப்படுத்தும் பலரும் குஷ்புவை விமர்சித்து ட்வீட் பதிவிட, உங்களைப் போன்றவர்களால் அஜித்துக்குத் தான் அசிங்கம். அஜித்தின் நற்பெயருக்கு கரையாக இருக்கிறீர்கள் என்று குஷ்பு பதிலளித்து வருகிறார்.

  இதற்கு முன்னதாக நடிகை கஸ்தூரியும் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவை டேக் செய்து ரசிகர்களின் மோசமான விமர்சனங்களை சுட்டிக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மங்காத்தா - ரசிகர்கள் கொண்டாட்டம்

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Ajith, Kushboo