நெற்றி வகிட்டில் குங்குமம் - ரகசிய திருமணம் செய்துக் கொண்டாரா பிக் பாஸ் சனம்?

நெற்றி வகிட்டில் குங்குமம் - ரகசிய திருமணம் செய்துக் கொண்டாரா பிக் பாஸ் சனம்?

சனம் ஷெட்டி

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி.

 • Share this:
  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருப்பதைப் பார்த்து பிக் பாஸ் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகி விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரான தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக தர்ஷன் மீது புகாரளித்தார் சனம். பின்னர் அவர்களின் காதல் பிரேக் அப்பில் முடிந்தது. முன்னதாக இருவருக்கும் நிச்சயதார்த்தமும் ஆகியிருந்தது.

  சிம்பு, ஜெயம் ரவியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியான நிதி அகர்வால்  இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 4-ல் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார் சனம் ஷெட்டி. ஆனால் அவரால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் எப்போது சேலை கட்டினாலும் வகிட்டில் குங்குமம் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சனம் ஷெட்டி.

  இதனால் அவருக்கு திருமணம் ஆகி விட்டதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதை ட்விட்டரிலும் ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த சனம், “ ஹாஹா..பலர் இந்த கேள்வியை கேட்கிறார்கள். எனக்கு திருமணமாகவில்லை. உங்கள் ஆசியுடன் ஒரு நாள் நடக்கலாம். திருமணமான பெண்கள் தான் நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க வேண்டும் என்ற வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: