ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல நடிகர் ராஜ்கபூரின் மனைவி மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகர் ராஜ்கபூரின் மனைவி மாரடைப்பால் மரணம்

கிருஷ்ணா கபூர்

கிருஷ்ணா கபூர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூரின் மனைவி கிருஷ்ணா கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

பாலிவுட் நட்டிகர் ரன்பீர் கபூரின் பாட்டியும், மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூரின் மனைவியுமான கிருஷ்ணா கபூர் முதுமை காரணமாக உடல்நலமில்லாமல் இருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூரின் ஆளுமைக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் கிருஷ்ணா கபூர். ராஜ் கபூர் - கிருஷ்ணா கபூர் தம்பதியினர் கடந்த 1946-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ரிஷி கபூர், ரந்தீர் கபூர் உள்ளிட்ட 3 மகன்களும், ரீமா ஜெயின், ரித்து நந்தா ஆகிய 2 மகள்களும் இருக்கின்றனர்.

முன்னதாக 1988-ம் ஆண்டு தனது 63-வது வயதில் ராஜ்கபூர் மறைந்தார். கபூர் குடும்பத்தினர் சினிமாத் துறையில் கொடிகட்டி பறந்தவர்கள். கிருஷ்ணாகபூரின் மறைவு அவரது குடும்பத்தினரையும் பாலிவுட் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Actor raj kapoor, Bollywood, Dead, Krishna Raj Kapoor, Raj Kapoor's Wife