கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்னனி ஹீரோக்கள் - வைரலாகும் அனிமேஷன் வீடியோ

கொரோனாவுக்கு எதிராக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இணைந்து போராடுவது போன்ற ஒரு அனிமேஷன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி கதாநாயகர்களாக ரஜினி விஜய் அஜித் போன்றோர் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது ரசிகர்களின் நிறைவேறாத கனவாக கனவாகும். அந்தக் கனனை அனிமேஷன் வீடியோ ஒன்றின் மூலம் நிறைவேற்றியுள்ளார் மதுரையைச் சேர்ந்த அனிமேட்டர் கதிர்.

கோலிவுட் ஹீரோக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொரோனாவை எதிர்ப்பது போன்ற கருவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிராபிக்ஸ் வீடியோவிற்கு இணையாவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 11 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை இதுவரை 13,00,000 மேற்ப்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.



வீடியோவில் முதலில் தோன்றும் விஜய் பஞ்ச டயலாக் பேசியபடியே, கோரோனா அரக்கனை பஞ்சர் செய்கிறார். மேலும் உதவி கோரி, ஹீரோக்கள் வாட்ஸ் அப் குருப்பில் மேசேஜ் ஒன்று தட்டிவிட அடுத்ததாக வந்து சேருகிறார் அஜித்.

இப்படியாக தொடர்ந்து எந்திரன் சிட்டி, மாரி தனுஷ், கைதி கார்த்தி, அவர் அண்ணன் சூர்யா என வந்து சேர அனைவரும் சேர்ந்து கொரோனாவை அடித்து நொறுக்குகிறார்கள்.

Also read... சிறப்புக் கட்டுரை: வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’! #HBDTHALAPATHYVijayஇறுதியாக வாட்ச் மெக்கானிக்கான சூர்யா, தன்னிடம் இருக்கும் 'டைம் மெஷின்' வாட்ச் மூலம் கொரோனா தோன்றிய நாளிற்கே சென்று அதனை தடுக்கிறார். இப்படியாக முடிகிறது அந்த வீடியோ.

இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு இருந்தாலும், வீட்டில் முடங்கிக்கிடக்கும் நடிகர்களுக்கு ஏன் இப்படி ஏக பில்டப் என்பன போன்ற வசவுகளும் இணையத்தில் வந்தவண்ணமே உள்ளது,
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading