Home /News /entertainment /

சன் டிவி சீரியலில் மீண்டும் கோலங்கள் சீரியல் தொல்ஸ்!

சன் டிவி சீரியலில் மீண்டும் கோலங்கள் சீரியல் தொல்ஸ்!

கோலங்கள் சீரியல்

கோலங்கள் சீரியல்

கோலங்கள் சீரியலின் இயக்குனராகவும், நடிகராகவும் திருச்செல்வம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். தற்போது மீண்டும் சன்டிவியில் புதிய சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் திருச்செல்வம்.

    கிளாசிக் மெகா ஹிட் சீரியல்களின் பட்டியல்களை எடுத்தால், முதல் பத்து சீரியல்களில் கோலங்கள் சீரியலுக்கு நிச்சயமாக இடம் பிடிக்கும். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியலாக கோலங்கள் இருந்தது. கோலங்கள் சீரியலின் இயக்குனராக திருச்செல்வம் மிகப்பெரிய ஹிட் சீரியலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதில் ‘தொல்ஸ்’ என்று அழைக்கப்படும் தொல்காப்பியன் என்ற பாத்திரத்திலும் நடித்து ரசிகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு பல சீரியல்கள் இயக்கியிருந்தாலும், கோலங்கள் சீரியலின் இயக்குனராகவும், நடிகராகவும் திருச்செல்வம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். தற்போது மீண்டும் சன்டிவியில் புதிய சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் திருச்செல்வம்.

    இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சன் டிவி சீரியலின் பெயர், எதிர் நீச்சல் ஆகும். திருச்செல்வம் இந்த சீரியலின் இயக்குனர். 'எதிர் நீச்சல்' சீரியலின் ப்ரோமோ ஒன்று சன் டிவியில் வெளியிடப்பட்டுள்ளது. கோலங்கள் சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், அதன் முக்கிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பு. தேவயானிக்கு பிரத்யேகமான ரசிகர் பட்டாளமே இந்த சீரியல் மூலம் உருவானது. அன்றாட வாழ்வில் பெண்கள் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் பற்றி கோலங்கள் சீரியலில் நடைமுறை வாழ்க்கையைச் சார்ந்து இருக்கும்.

    இதையும் படிங்க.. கருத்து சொல்ல தெர்மாமீட்டருடன் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

    எதிர் நீச்சல் சீரியலும் இதையே பிரதிபலிக்கிறது. ஏற்கனவே வெளியான புரோமோவில் இருந்து, இந்த சீரியலின் கதைக்களம் வழியாக கலைச்செல்வி இலக்கியா, பானு, ஜனனி என்கிற நான்கு கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு பெண்களுமே, எதிர் நீச்சல் சீரியலின் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், இவர்கள் அனைவருமே கஷ்டப்பட்டு படித்து முன்னேறிய கதைகளை சொல்கிறது போல காட்சிகள் உள்ளன. இது முழுக்க முழுக்க பெண்களையும் அவர்களின் வளர்ச்சி பாதைகளில் வரும் தடைகளையும் பிரதான கருவாக கொண்டிருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. இதனாலேயே வரவிருக்கும் எதிர் நீச்சல் நாடகத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.

    மேலும், சன்டிவியின் மற்றொரு ஹிட் சீரியலான தெய்வ மகள் சீரியலில் நடித்த ஒரு பிரபலம், எதிர் நீச்சலில் நடிக்கிறார். தெய்வ மகள் சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுப்ரமணியன் இந்த புதிய சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஆட்டி வைக்கும் ஐஸ்வர்யா!

    பல நாட்களாக படபிடிப்பு நடந்து கொண்டிருந்த புதிய சீரியல் தற்போது ஒளிபரப்பாகத் தயாராகி வருகிறது. ஏற்கனவே ஹிட் கொடுத்த சீரியலின் இயக்குனர் என்பதால், பெரும்பாலும் சன் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொல்ஸ் பாத்திரம் போல, இந்த சீரியலிலும் திருச்செல்வம் ஏதேனும் பாத்திரத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி