"என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை" - கே.ஜே. யேசுதாஸ்

  • News18
  • Last Updated: September 26, 2020, 7:44 PM IST
  • Share this:
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை என பாடகர் கே.ஜே. யேசுதாஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாடகரான யேசுதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அண்ணா என்று கூப்பிடும் பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்க வில்லை ஆனால் ஒரு கூட பிறந்தவர் போல பழகியவர்.

முன் ஜென்மத்தில் நானும் எஸ் பி பி அவர்களும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார். சங்கராபரணம் என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதை கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்க வில்லை என கூறமாட்டர்கள்.


இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சிகரம் படத்தில் பாடிய அகரம் இப்போ சிகரம் ஆச்சு என்ற பாடல் பாலு எனக்கு பரிசாக பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடகள்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.Also read... எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிச் சடங்கு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்

பாரிஸில் நாங்கள் தங்கிய போது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்பொழுது பாலு ரூம் சர்வீஸ் என குரல் மாற்றி கிண்டல் செய்தார் பின்பு அனைவர்க்கும் அவரே சமைத்து பகிர்ந்தார். அவ்வளவு பசியில் அந்த சாப்பாடு ருசியாக இருந்தது எல்லோரும் வயிறார சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். இந்த கொரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது.நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், ஸ்டேஜில் பாலுவும் நானும் ஒரு ஓரமாக சிரித்துக்கொண்டிருப்போம் அப்படி பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்”.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading