திரைக்கதையில் தேறுவாரா கிருத்திகா உதயநிதி...?

கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி 2013 இல் வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனரானார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா மீண்டும் படம் இயக்குகிறார். இந்தமுறை அவர் மலையாள நடிகர்களுடன் கைகோர்க்க உள்ளார்.

கிருத்திகா உதயநிதி 2013 இல் வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனரானார். சிவா, ப்ரியா ஆனந்த் நடித்திருந்த இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இரு பாடல்கள் இன்றும் இளையவர்கள் மத்தியில் முணுமுணுக்கப்படுவதைத் தாண்டி இந்தப் படம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. உதயநிதி தனது மனைவிக்காக இந்தப் படத்தை தயாரித்தார்

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தயாரிப்பில் அவரை வைத்து காளி என்ற படத்தை இயக்கினார் கிருத்திகா. வித்தியாசமான திரைக்கதையில் அவர் காளியை உருவாக்கியிருந்தார். அந்த வித்தியாசமான திரைக்கதையே காளியின் பலவீனமாகவும் அமைந்தது. விமர்சகர்களின் கடுமையான வார்த்தைகள் கிருத்திகாவை சங்கடப்படுத்தின. திரைக்கதையை குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என்று சில விமர்சகர்களுடன் நேரடியாகவே விவாதிக்கவும் செய்தார்.

Also read...  "தயவு செய்து விதிகளை பின்பற்றுங்கள்" - கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்...!

காளியில் சறுக்கியது கிருத்திகாவா இல்லை விமர்சகர்களும், ரசிகர்களுமா என்பதை கிருத்திகா உணருவதற்கு இன்னொரு படம் அவர் செய்தாக வேண்டும். மூன்று வருட இடைவெளிக்குப் பின் அதற்கு தயாராகியுள்ளார்.

கிருத்திகா இயக்கப் போகும் புதிய படத்தில் ஜெயராம் - பார்வதியின் மகன் காளிதாஸும், ப்ரியதர்ஷன் - லிஸி தம்பதியரின் மகள் கல்யாணியும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் நடித்துள்ளனர். இணைந்து நடிப்பது இதுவே முதல்முறைஇந்தமுறை கிருத்திகா திரைக்கதையில் தேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: