Kiruthiga Udhayanidhi: வாழ்வின் பயணத்தை பற்றிய திரைப்படம் - புதிய படம் குறித்து கிருத்திகா விளக்கம்!

கிருத்திகா உதயநிதி

சிறிய இடைவெளிக்கு பிறகு கிருத்திகா மீண்டும் படம் இயக்குகிறார். இந்தமுறை நடிகர் ஜெயராமின் மகன் நாயகனாக நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிருத்திகா உதயநிதி, காளிதாஸ் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இந்நிலையில், படத்தின் நாயகி, ஒளிப்பதிவாளர் குறித்த தகவலையும் படநிறுவனம் அறிவித்துள்ளது.

வணக்கம் சென்னை, காளி திரைப்படங்களை கிருத்திகா இயக்கியுள்ளார். இவ்விரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதிலும், இரண்டாவது படம் காளியை வித்தியாசமான திரைக்கதையில் எடுத்திருந்ததால் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என கிருத்திகா எதிர்பார்த்தார். ஆனால், விமர்சகர்கள் திரைக்கதையை படத்தின் பலவீனமாக விமர்சித்தனர். சில விமர்சகர்களுடன் திரைக்கதை குறித்து கிருத்திகா விவாதம் செய்ததோடு, தனது அதிருப்தியையும் வெளியிட்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிய இடைவெளிக்கு பிறகு கிருத்திகா மீண்டும் படம் இயக்குகிறார். இந்தமுறை நடிகர் ஜெயராமின் மகன் நாயகனாக நடிக்கிறார். படத்தை ரைஸ்ஈஸ்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக தான்யா ரவிச்சந்திரனையும், ஒளிப்பதிவாளராக hpச்சார்ட் எம்.நாதனையும் ஒப்பந்தம் செய்திருப்பதாக தயாரிப்பு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

Also read... இந்தி அறிந்தவர்களுக்கு பார்த்திபன் விடுத்திருக்கும் வேண்டுகோள்...!

நல்ல ஒரு கதைக்காக காத்திருந்ததாக கூறியிருக்கும் கிருத்திகா, "இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை. பயணம் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும்" என தெரிவித்துள்ளார். விரைவில் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை அறிவிக்கயிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: