ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கெளம்பிட்டாளே விஜயலட்சுமி...குஷ்பு வெளியிட்ட ஜோதிகாவின் பாடல்- வீடியோ

கெளம்பிட்டாளே விஜயலட்சுமி...குஷ்பு வெளியிட்ட ஜோதிகாவின் பாடல்- வீடியோ

காற்றின் மொழி பட டீசர்

காற்றின் மொழி பட டீசர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  காற்றின் மொழி படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடலை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

  கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான `துமாரி சுலு’ படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். துமாரி சுலு என்ற படத்தை இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். இப்படத்தில் சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியாக நடித்த வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகிறார். இதனால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `துமாரி சுலு’ படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .

  இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் `காற்றின் மொழி' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, லட்சுமி மஞ்சு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  இந்தப் படம் ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கிளம்பிட்டாளே விஜயலட்சுமி என்ற பாடலை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.

  ' isDesktop="true" id="57169" youtubeid="DveXWr6CNwU" category="entertainment">

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress Jothika, Kaatrin mozhi, Kilambittale vijayalakshmi songs, Song released