முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கூகுள் பார்த்து லஸ்ட் ஸ்டோரிஸ் படக் காட்சியில் நடித்தேன் - நடிகை ஓபன் டாக்

கூகுள் பார்த்து லஸ்ட் ஸ்டோரிஸ் படக் காட்சியில் நடித்தேன் - நடிகை ஓபன் டாக்

கியாரா அத்வானி

கியாரா அத்வானி

அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடினேன்.

  • Last Updated :

லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்தது குறித்து நடிகை கியாரா அத்வானி பேட்டியளித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்‌ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர் அர்ஜூன் ரெட்டி இந்தி ரீமேக்கிலும், காஞ்சனா இந்தி ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் படத்தை கரண் ஜோஹர், ழோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.

கியாரா அத்வானி

சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்தது குறித்து தற்போது பேட்டியளித்திருக்கும் நடிகை கியாரா அத்வானி,  "அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடினேன். அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

அந்தக் காட்சி தவிர்க்க இயலாததாக இருந்தது. படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். நான் நகைப்புக்குரியவராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்’ என்று தெரிவித்தார்.

வீடியோ பார்க்க: நடிகர் சங்கத்தேர்தலில் ரஜினி, கமல் எதிர்.. எதிர் அணியா? - பாக்யராஜ் விளக்கம்

top videos

    First published:

    Tags: Kiara Advani