ராம் சரண் படத்தின் நாயகி யார்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷங்கர்!

ஷங்கர் மற்றும் கியாரா அத்வானி

நாயகி உறுதியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், நாயகி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக ஷங்கர் அறிவித்துள்ளார்.

இந்தியன் 2 படம், தயாரிப்பாளர் லைகாவுடன் ஏற்பட்ட மோதலில் பாதியில் நிற்க, தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கினார் ஷங்கர். தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகும் 50 வது படம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் வேறு படத்தை இயக்க வேண்டும் என லைகா நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடியானதும், ராம் சரண் படத்தின் வேலைகள் சுறுசுறுப்படைந்தன. ராம் சரணும், தில் ராஜுவும் ஷங்கரை சென்னை வந்து சந்தித்தனர். ப்ரி புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், படத்தின் நாயகி மட்டும் உறுதி செய்யப்படாமலிருந்தது. அனேகமாக கியாரா அத்வானி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் என பல வாரங்கள் முன்பே நாம் குறிப்பிட்டிருந்தோம்.



Also read... சாதனை விலைக்கு விற்கப்பட்ட விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை!

இந்நிலையில், கியாரா அத்வானியை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதை அதிகாரப்பூர்வமாக ஷங்கர் உறுதி செய்துள்ளார். நாயகி உறுதியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: