டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியால் உற்சாகமடைந்த நடிகை குஷ்பு.. மண்டை மேலே கொண்டே இன்ஸ்டாவில் போட்டோபதிவு!

குஷ்பு

தனது உடல் எடையில் 14 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார்.

  • Share this:
நடிகை குஷ்பு சுந்தர்.சி தனது வரவிருக்கும் ரியாலிட்டி ஷோவான டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியால் மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் தொகுப்புகளில் இருந்து சில BTS போட்டோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

குஷ்பு டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-வின் ஜட்ஜாக பங்கேற்கிறார். அவருடன் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் பிருந்தா கோபாலும் நடுவராக இருக்க போகிறார். இந்த நிகழ்ச்சிக்காக தனது நண்பருடன் பணியாற்றுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் குஷ்பு தெரிவித்திருந்தார்.

மேலும் தனது இன்ஸ்டாபக்கத்தில் BTS படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு "#DanceVsDanceS2 மிக விரைவில் (sic)" என்று கேப்ஷன் செய்துள்ளார். இந்த படங்களில், நடிகை பளபளப்பான உடை மற்றும் சிகை அலங்காரத்தில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். குஷ்புவின் இந்த புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை கண்டுஅம்மு ராமச்சந்திரன், அஞ்சலி ராவ், ஷ்யாம் கணேஷ், அரவிந்த் கதரே உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் குஷ்பு மீது தங்கள் அன்பைப் பொழிந்து வருகின்றனர்.

சமீபத்திய அறிக்கைகளின்படி, டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஷ்பு சில வாரங்களுக்கு முன்பு தனது அற்புதமான உடல் மாற்றத்தின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனில் குஷ்பு தனது உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆரோக்கியமான உணவு மற்றும் ஒர்க் அவுட் மூலம் தனது உடல் எடை இழப்பு பயணத்தை இவர் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டார்.

அதன்மூலம் தனது உடல் எடையில் 14 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார். மேலும் அவர் வெளியிட்ட ட்ரான்ஸ்பர்மேஷன் போட்டோக்கள் காட்டுத்தீ போல பரவியது. இந்த நிலையில், கலர்ஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வரும் குஷ்பு BTS படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் ஈர்த்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்திற்கு "மண்டை மேலே கொண்டே" என்று கேப்ஷன் செய்து நகைச்சுவையாக சில போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

ALSO READ |  மாதவனை வில்லனாக்க முயற்சிக்கும் மோகன் ராஜா

குஷ்பு கோகுலத்தில் சீதை நிகழ்ச்சி மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொலைக்காட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதில் அவர் டாக்டர் மங்களமாக காணப்படுகிறார். இதற்கு முன், குஷ்பு லக்ஷ்மி ஸ்டோர்ஸ் (மகாலட்சுமி தேவராஜ்) மற்றும் நந்தினி (பார்வதி/துர்கா அம்மன்) தொடர்களில் நடித்துள்ளார். முன்னதாக, அழகிய தமிழ் மகன், ஜோடி நம்பர் ஒன்-சீசன் 5 மற்றும் மானாட மயிலாட சீசன்கள் (3-5 மற்றும் 7-8) ஆகிய ரியாலிட்டி ஷோக்களுக்கு அவர் நடுவராக இருந்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக, குஷ்பு ஜாக்பாட், நிஜங்கள் மற்றும் நம் வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)


 

  
View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: