Home » News » Entertainment » KHUSHBHU SUNDAR TWEETS CONDOLENCES FOR VJCHITHRA UNTIMELY DEATH MG

’இவ்வளவு தூரம் தள்ளியது எது? அவர் யாரிடமாவது பேசியிருக்கலாம்’ - சித்ரா மறைவுக்கு குஷ்பு இரங்கல்..

எனக்கு தனிப்பட்ட வகையில் பழக்கமில்லை. ஆனால், வலியை உணர்கிறேன். அவர் யாரிடமாவது பேசியிருக்கலாம். அமைதியில் இருப்பீர்கள் என நம்புகிறேன் சித்ரா” என நடிகர் சித்ரா மறைவுக்கு குஷ்பு ட்வீட் செய்திருக்கிறார்.

’இவ்வளவு தூரம் தள்ளியது எது? அவர் யாரிடமாவது பேசியிருக்கலாம்’ - சித்ரா மறைவுக்கு குஷ்பு இரங்கல்..
நடிகை சித்ரா
  • Share this:
”ஆற்றல் நிறைந்த ஒரு வாழ்வு காணாமல் போயிருக்கிறது. அவர்களை எது இந்த நிலைக்கு தள்ளியது? அவரை எனக்கு தனிப்பட்ட வகையில் பழக்கமில்லை. ஆனால், வலியை உணர்கிறேன். அவர் யாரிடமாவது பேசியிருக்கலாம். அமைதியில் இருப்பீர்கள் என நம்புகிறேன் சித்ரா” என நடிகர் சித்ரா மறைவுக்கு குஷ்பு சுந்தர் ட்வீட் செய்திருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சி சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, பூவிருந்தவல்லி அருகே, தனியார் ஓட்டலில் அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ஹேமந்த் ரவி தங்கியுள்ளார். ஈவிபி பூங்காவில் அதிகாலை சூட்டிங் முடித்து விட்டு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்த சித்ரா புடவையை மின் விசிறியில் மாட்டி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெளியான தகவலில், சித்ரா ஹேமந்த் ரவியிடம், தான் குளிக்கச் செல்வதாகக் கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால், தான் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமந்த் ரவி தெரிவித்துள்ளார்.

ஆனால், கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது, சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்தாகவும் கூறியுள்ளார்.அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்த நடிகை சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்றும், படப்பிடிப்பில் சித்ராவிற்கு வேறு ஏதும் பிரச்னை இருந்ததா என்றும், ஹேமந்த் ரவியிடம் நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஹேமந்த் ரவி, சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். சித்ரா-ஹேமந்த் ரவியின் திருமணம் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு, நிச்சயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கலைஞர்கள் பலரும், சித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading