திரைக்குவர காத்திருக்கும் தென்னிந்திய பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் - முழு விவரம்!

திரைக்குவர காத்திருக்கும் தென்னிந்திய பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் - முழு விவரம்!

பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்

படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎப் 2 படத்தின் டீஸர் வெளியானது.

  • Share this:
கேஜிஎஃப் 2, அண்ணாத்த உள்ளிட்ட திரைக்கு வர காத்திருக்கும் பெரிய படங்கள் என்னென்ன, அது குறித்த தகவல்களை தற்போது காணலாம்.

கேஜிஎப் 2

கேஜிஎப் படத்தின் 2வது பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2 வது பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் மற்றும் ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேஜிஎஃப் 2


சமீபத்தில் இந்த படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎப் 2 படத்தின் டீஸர் வெளியானது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 16ம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகும் என்று நேற்று அறிவித்துள்ளனர். இதனால் கேஜிஎப் படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேஜிஎப் திரைப்படம் மட்டுமின்றி எண்ணற்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் போட்டியில் உள்ளன. அவற்றை இங்கு காண்போம்.,

த்ரிஷ்யம் 2

2013-ம் ஆண்டு ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 'த்ரிஷ்யம்' படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'ராம்' படத்தில் இணைந்து பணிபுரிந்தது. இந்த நிலையில் தற்போது த்ரிஷ்யம் 2 உருவாகியுள்ளது. இதனால் 'த்ரிஷ்யம்' படத்தின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். இந்த படம் விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புஷ்பா (தெலுங்கு)

"புஷ்பா" அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆந்திராவின் சேஷாச்சலம் வனப்பகுதியில் சிவப்பு சந்தன கடத்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லரான இந்த படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் பதிப்புகளுடன் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

சர்காரு வாரி பட்டா (தெலுங்கு)

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சர்காரு வாரி பாட்டா அதிரடி திரைப்படத்தை பரசுரம் இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர்
மகேஷ் பாபுவின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஜனவரி 25 ஆம் தேதி துபாயில் தொடங்கியது.

ராதே ஷியாம் (தெலுங்கு)

ராதே ஷியாம் காதல் திரைப்படமாகும். இதில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராதா கிருஷ்ணா குமார் இயக்கியுள்ள இந்த படம் ஐரோப்பாவின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் படம். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'ராதே ஷ்யாம்' படத்தை முடித்துவிட்டு 'ஆதிபுருஷ்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.

ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு)

மிகப்பெரிய தெலுங்கு மல்டி ஸ்டார் இணையும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராஜமவுலி இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இணைந்துள்ளதை குறிக்கும் வகையில் ஆர்.ஆர்.ஆர் என பெயரிடப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு)


துணை வேடங்களில் ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்கின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த திரைப்படம் 20 அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்தியன் 2 (தமிழ்)

எஸ்.சங்கர் இயக்கிய அதிரடி திரில்லர் திரைப்படமான இந்தியன் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகை காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆச்சார்யா (தெலுங்கு)

கோரடலா சிவா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் ஒன்றாக நடிக்கின்றனர். இந்த படத்தில் முதலில் நடிகை த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அவர் விலகியதை தொடர்ந்து காஜல் அகர்வால் கமிட் செய்யப்பட்டார். சோனு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள இந்த படத்தில் ரெஜினா கசான்ட்ரா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். காஜல் அகர்வால் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் சேர்ந்து கைதி எண் 150 படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் (தமிழ்)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்துக்கு 'விக்ரம்' எனத் தலைப்பிட்டுள்ளனர். விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அண்ணாத்த (தமிழ்)

சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.

அண்ணாத்த (தமிழ்)


இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. ஆனால் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் சில பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதனிடையே நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: