KGF Chapter 2 Teaser | கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானது

KGF Chapter 2 Teaser | கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானது

கேஜிஎப்

KGF Chpater 2 Teaser | கே.ஜி.எப் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
    கே.ஜி.எப் படத்தின் நாயகன் யாஷின் பிறந்தநாள் நாளை(ஜனவரி 8) கொண்டாடப்பட உள்ள நிலையில் கே.ஜி.எப் 2 படத்தின் தெலுங்கு டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். நடிகர் யாஷின் பிறந்தநாள் பரிசாக படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது.

    2018-ம் ஆண்டு கே.ஜி.எஃப் 1, தமிழ், தெலுங்கு, கன்னடம் என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் தொடர்ச்சியாக கே.ஜி.எப் 2 பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் நீல் பிரசாந்த், 2 ஆம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.

    கே.ஜி.எப் 2 படத்தில் வில்லனாக பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் நடித்துள்ளார.  இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது.

    கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்தது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாஷ் - சஞ்சய் தத் மோதும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள் அனல் தெறிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப் 2 படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



    கே.ஜி.எப் படத்தின் முதல் பாகம் போன்றே இரண்டாம் பாகத்திலும் நடிகர் யாஷின் அதிரடி காட்சிகள் பிரமண்டமாக படபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பலர் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: