கேஜிஎப் 2 - விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

கேஜிஎப் சாப்டர்-2

கேஜிஎப் சேப்டர் 2 எப்போது வெளியாகும் என்று ஐந்து மொழி ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாகுபலிக்கு பிறகு இரண்டாவது பாகத்துக்காக இந்தியாவே காத்திருக்கும் படம் கேஜிஎப். 2018 இல் கேஜிஎப் சேப்டர் 1 என்ற பெயரில் முதல் பாகம் வெளியானது. கன்னடப்படமான இது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பெரும்பாலான மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது. 

பொதுவாக ஒரு படத்தில் நாலு காட்சிக்கு ஒரு பன்ச் டயலாக் வரும். கேஜிஎப் அப்படியே உல்டா. "நான் பத்து பேரை அடிச்சி டான் ஆனவன் இல்லடா. நான் அடிச்ச பத்து பேருமே டான்தான்..." இதுபோன்ற பன்ச் டயலாக்குகளை வைத்தே மொத்தப் படத்தையும் பில்டப் ஏற்றியிருந்தார்கள். ஏற்றியவர் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஹீரோவாக நடித்த யாஷ்.

Also read... திரைக்கதையில் தேறுவாரா கிருத்திகா உதயநிதி...?

கேஜிஎப் சேப்டர் 2 எப்போது வெளியாகும் என்று ஐந்து மொழி ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஜுலை 16 படம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். கொரோனா இரண்டாம் அலையின் உக்கிரம் ஜுலையிலும் தொடர வாய்ப்புள்ளதால், பட வெளியீட்டு தேதியை தசராவுக்கு மாற்ற தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது. தசராவை முன்னிட்டு அக்டோபர் 15 படத்தை வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை எப்போது தணியும் என்பது உறுதி இல்லாததால் அக்டோபர் 15 படம் வெளியாகும் என்று அறிவிக்க தயங்குகின்றனர். இன்னொருமுறையும் வெளியீட்டு தேதி தள்ளிப்போனால் என்ன செய்வது என்ற தயக்கம்தான் இதற்கு காரணம். எனினும் ஜுலை 16 க்குள் முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: