கேஜிஎப் சாப்டர்-2 பட கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழுவினர்!

கேஜிஎப் சாப்டர்-2

கேஜிஎப் சாப்டர்-2 படத்தின் வெளியீட்டு தேதி இன்று(ஜன.29) படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Share this:
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். அனைத்து மொழிகளிலும் இதன் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2ம் பெரும் பொருட்செலவில் தயாரானது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. இதனால் படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது படத்தின் வெளியீட்டு தேதி இன்று(ஜன.29) மாலை படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத் , ரவீனா டாண்டன் , மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனை, படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by Yash (@thenameisyash)


கேஜிஎப் சாப்டர்-2 படத்தில் தனது காதாபாத்திர போஸ்ட்டரை யாஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் "ராக்கி" என்பது அனைவரும் அறிந்ததே. முன்னதாக வெளியான முதல் பாகத்தில் ராக்கி திட்டமிட்டபடி கோலார் தங்க சுரங்கத்தில் பணிபுரிவது போல கேஜிஎப்-க்குள் நுழைந்து இறுதியில் தங்க சுரங்கங்களை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவருகிறார். தற்போது வரவிருக்கும் திரைப்படத்தில் ராக்கியின் தோற்றம் முதல் பாகத்தில் வருவது போல அதே மிரட்டல் பாணியுடன் இருக்கிறது. 
View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)


இதையடுத்து, சஞ்சய் தத் தனது கேரக்டர் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் காதாபாத்திரம் தான் சஞ்சய் தத்தின் ஆதிரா. வரவிருக்கும் சாப்டர்-2ல் சஞ்சய் தத் யாஷ்க்கு முக்கிய வில்லனாக நடிக்கிறார். 61 வயதான நடிகர் தனது முரட்டுத்தனமான தோற்றத்தில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார். அவர் கோலார் தங்க சுரங்கங்களின் (கேஜிஎஃப்) மறைந்த எஜமானரான சூரியவர்தனின் சகோதரர் ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப் சாப்டர்-1ல் சூரியவர்தன் கதாபாத்திரத்தில் ரமேஷ் இந்திரன் நடித்தார். அவரது மகனான கருடா பாத்திரத்தில் ராம் என்கிற ராமச்சந்திர ராஜு நடித்திருந்தார். இவர் முதல் பாகத்தில் ராக்கியின் வில்லனாக இருந்தார்.
கே.ஜி.எஃப் சாப்டர்-2ல் நடித்துள்ள ரவீனா டாண்டன் தனது கதாபாத்திர போஸ்டரை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசியல் தலைவர் ரமிகா சென் வேடத்தில் ரவீனா டாண்டன் நடித்துள்ளார். ரவீணாவின் காதாபாத்திரம் கோலார் தங்க சுரங்கங்கள் மீதான ராக்கியின் கட்டுப்பாட்டை பெரிதளவில் பாதிக்கும் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியும் தனது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளார். ராக்கியின் காதிலியான ரீனா காதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். கேஜிஎஃப் சாப்டர் 2ல் ராக்கி தனது காதல் மற்றும் அவரது வன்முறைத் தொழிலுக்கு இடையே எதை தேர்வு செய்ய போகிறார் என்பது போன்று பட காட்சிகள் அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
View this post on Instagram

 

A post shared by Prashanth Neel (@prashanthneel)


இறுதியில் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஒரு சிறிய குறிப்பை பகிர்ந்துள்ளார். கேஜிஎஃப் டைம்ஸ் என வெளியாகியுள்ள அந்த போஸ்டரில் படம் எப்படி முடிவடையும் என்பதற்கான குறிப்பை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். முதல் சாப்டரில் தனது இறக்கும் தாய்க்கு ராக்கி வாக்குறுதியளித்ததன் மூலம் தொடங்கிய கதைக்களம் வரவிருக்கும் படத்திற்கும் அடித்தளமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: