நடிகர் யாஷ் கன்னட சினிமாவில் 2008 ஆம் ஆண்டு முதல் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் 2018 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வெற்றிப் பெற்றது. கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.
இதையடுத்து கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் கேட்டு வந்தனர். நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர்வெளியிடப்பட்டது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்தது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகனான யாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.